சுற்றுச்சூழல் துறை அதிகாரி சஸ்பெண்ட்.. தமிழக அரசு உத்தரவு.!

சுற்றுச்சூழல் துறை அதிகாரி சஸ்பெண்ட்.. தமிழக அரசு உத்தரவு.!

Update: 2020-12-18 15:26 GMT

ஊழல் புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை பனகல் மாளிகையில் இருக்கும் சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் பாண்டியனின் வீட்டில், ரூ.1.37 கோடி கணக்கில் வராத பணமும், 3 கிலோ தங்க நகைகளும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 

அதோடு வைரம், வெள்ளி, கார்கள், சொத்து ஆவணங்கள் என அனைத்தும் கிடைத்தது. கண்காணிப்பாளராக இருக்கும் பாண்டியன் வீட்டில், இவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதில், அந்த அலுவலகத்தில் பணியாற்றும் பிற அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பாண்டியனிடம் விசாரணை நடத்தினர்.

மேலும், அவரது லாக்கரை சோதனை செய்ய அனுமதி வழங்குமாறு வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையில், ஊழல் புகாரில் சிக்கிய பாண்டியனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Similar News