பா.ஜ.க ஆதரவை கோரி இபிஎஸ் அணி சந்தித்ததா? பா.ஜ.க தலைவர் அண்ணமலையின் முடிவு என்ன?
அண்ணாமலை அவர்களுடன் இபிஎஸ் தரப்பு சந்தித்து தற்பொழுது ஆதரவை தெரிவிப்பதற்கான முடிவை எடுக்க இருக்கிறார்கள்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சந்தித்தனர். இதற்காக சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக சென்னை தி நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இந்த ஒரு சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. இன்று மாலை அண்ணாமலை அவர்களை ஓ.பி.எஸ் தரப்பு சந்திக்க உள்ள நிலையில் முன்கூட்டியே இ.பி.எஸ் தரப்பு சந்தித்து இருக்கிறது.
இந்த ஒரு சந்திப்பில் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி மற்றும் ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்று இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் இந்த ஒரு சந்திப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டுவிடும் தங்கள் தரப்பிற்கு ஆதரவு அளிக்க இ.பி.எஸ் அணியினர் கூறுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று மாலை அண்ணாமலை அவர்களை ஓ.பி.எஸ் தரப்பு சந்திக்க உள்ள நிலையில் முன்கூட்டியே பா.ஜ.க தலைவர்களை இபிஎஸ் அணியினர் சந்தித்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட இருக்கின்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சியினருடன் யார் கூட்டணி வைப்பார்? என்பது தொடர்பாக தற்போது பெரும் எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.
Input & Image courtesy: Maalaimalar