ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1.17 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி.!

இதுவரை மாவட்டம் முழுவதும் 24 அரசு மையங்களிலும், 42 தனியார் மருத்துவமனைகளிலும் சேர்த்து 1.17 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2021-04-26 13:42 GMT

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியானது தீவிரப்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் முதலில், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன் பின்னர் 60 மற்றும் 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியானது தொடங்கியது.

இதுவரை மாவட்டம் முழுவதும் 24 அரசு மையங்களிலும், 42 தனியார் மருத்துவமனைகளிலும் சேர்த்து 1.17 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News