சென்னிமலை முருகன் கோயிலில் பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் முடிப்பு: அறநிலையத்துறை அதிகாரிகளை வெளுத்து வாங்கிய பக்தர்கள்!
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்திற்குள் உள்ளது சென்னிமலை. அங்கு சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவு வருகை தருவர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்திற்குள் உள்ளது சென்னிமலை. அங்கு சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவு வருகை தருவர். அதன்படி சென்னிமலை முருகர் கோயிலில் சூரசம்ஹாரம் நடத்தப்பட்டுள்ளது. இந்த விழாவில் பக்தர்கள் இன்று நடைபெற்றுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த முருக பக்தர்கள் அனைவரும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக ரவிக்குமார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பக்தர்கள் இல்லாமல் எப்படி சூரசம்ஹாரம் விழாவை நடத்தலாம் என்று கேள்வி எழுப்பினர். அதிகாரிகள் வேலையைத்தான் செய்யனும் தேவையின்றி பூஜையில் தலையிடுவது தவறு. உண்டியல் காசு எடுத்தோமோ சென்றோமோ இருக்க வேண்டும். இந்துக்களின் பூஜையில் தலையிடுவது சரியில்லை.
அனைத்து பக்தர்களும் விரதம் இருந்து கோயிலுக்கு வருவார்கள். விவசாயம் செய்துவிட்டு மாலை நேரத்தில்தான் வருவார்கள். அது போன்றவர்கள் வருவதற்கு முன்பாகவே பூஜையை முடித்துவிட்டால் அவர்கள் ஏமாந்து போகமாட்டார்கள் என மிகவும் ஆக்ரோஷமாக கேள்வி கேட்டனர். இதனை கேட்டுக்கொண்ட அதிகாரிகள் வேறு வழியின்றி மவுனமாக காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Twitter