10, 12ம் வகுப்பு மாணவர்கள் பாதி படித்திருந்தால் போதும்.. தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி.!

10, 12ம் வகுப்பு மாணவர்கள் பாதி படித்திருந்தால் போதும்.. தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி.!

Update: 2021-01-17 13:55 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் தமிழகத்தில் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே வருகின்ற 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தில் 50 சதவீதம் குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வழியில்தான் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக பாடத்திட்டத்தை அரசு குறைத்துள்ளது. புதிய பாடத்திட்டத்துக்கான புளு பிரிண்ட் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா சூழலில் மனவருத்தத்தில் இருந்தவர்களுக்கு தற்போது இது ஒரு ஆறுதல் தரும் விஷயமாக அமைந்துள்ளது என்றும் கூறலாம்.

Similar News