எடப்பாடியார் கையில் சிக்கிய ஆதாரம்? தி.மு.க தில்லுமுல்லு அனைத்தும் அம்பலத்திற்கு வரப்போகிறது?

எடப்பாடியார் கையில் சிக்கிய ஆதாரம்? தி.மு.க தில்லுமுல்லு அனைத்தும் அம்பலத்திற்கு வரப்போகிறது?

Update: 2020-12-23 08:44 GMT

திமுக செய்த ஊழலை கையில் வைத்துள்ளோம். அவை அனைத்தும் விரைவில் அம்பலத்திற்கு வரப்போகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் ராமநாதபுரம் முதல் கட்டுமாவடி வரையுள்ள 143.40 கிலோ மீட்டர் சாலையை மேம்படுத்த ஒப்பந்த மதிப்புத் தொகை ரூபாய் 143.41 கோடி.

ஆனால், 77.67 விழுக்காடு, அதாவது ரூபாய் 111 கோடி அதிகரித்து ரூபாய் 254.80 கோடி கொடுத்துள்ளார்கள். இது Schedule–லில் குறிப்பிடப்பட்ட தொகையல்ல, வேலை செய்ய செய்ய அதிகரித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை வரையுள்ள 114.67 கிலோ மீட்டர் சாலையை மேம்படுத்த ஒப்பந்த மதிப்புத் தொகை ரூபாய் 119.26 கோடி. ஆனால், 71 விழுக்காடு, அதாவது ரூபாய் 84.72 கோடி அதிகரித்து ரூபாய் 203.98 கோடி கொடுத்துள்ளார்கள். இவ்வளவும் அவர்கள் ஆட்சியில் செய்த தில்லுமுல்லு. இதெல்லாம் Box Tender.

இவர்கள் செய்த ஊழலை கையில் வைத்துள்ளோம், அம்பலத்திற்கு வரப்போகிறது. சந்தர்ப்பம் வரும்போது செய்ய வேண்டும், அவசரப்படக்கூடாது. எந்தக் காலகட்டத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அப்போது செய்ய வேண்டும். இதில், யாரெல்லாம் ஒப்பந்தம் எடுத்தார்களோ, அவர்களெல்லாம் திமுக காலத்தில் ஒப்பந்தம் எடுத்து செய்து கொண்டிருந்தவர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், நாங்கள் இதே TNRSP-ல் ஆன்-லைனில் டெண்டர் விட்டோம். இதில் ஊழல் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. உச்சநீதிமன்றம் சென்றபோது, உச்சநீதிமன்றம் அரசியலுக்காக போடப்பட்ட வழக்கு என்று நிறுத்தி வைத்துவிட்டார்கள். இதுதான் நடந்தது என தெரிவித்துள்ளார்.

Similar News