பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் கவனத்திற்கு: பிரதமர் கூறும் அருமையான ஆலோசனை!
பரீட்சைக்கு பயமில்லைக் கையேட்டின் நோக்கம் தேர்வு தொடர்பான அனைத்து வகையான மன அழுத்தங்களிலிருந்தும் மாணவர்களை விடுவிப்பதாகும்.
பரீட்சைக்கு பயமில்லைக் கையேட்டின் நோக்கம் தேர்வு தொடர்பான அனைத்து வகையான மன அழுத்தங்களிலிருந்தும் மாணவர்களை விடுவிப்பதாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் கோடர்மாவில் உள்ள ஒரு பள்ளி மாணவர்கள் பரீட்சைக்கு பயமில்லைக் கையேட்டினைப் படித்த பின் தேர்வு தொடர்பான பதற்றத்திலிருந்து விடுபட்டதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி பதிவிட்டிருந்த பிட்டர் பதிவு ஒன்றிற்கு பிரதமர் மோடி அவர்கள் தற்போது பதில் ட்விட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.
ட்விட்டரில் பிரதமர் கூறுகையில், "மிக நன்று, தேர்வு தொடர்பான அனைத்து வகையான மன அழுத்தங்களிலிருந்தும் மாணவர்கள் விடுபட வேண்டும், அதுவே பரீட்சைக்கு பயமில்லைக் கையேட்டின் நோக்கம்" என்று கூறி இருக்கிறார் குறிப்பாக தேர்வு எதிர்கொள்ளும் அனைத்து மாணவர்களும் இந்த ஒரு கையேட்டின் உதவி மூலமாக மன அழுத்தத்திலிருந்து நீங்கள் விடுபட முடியும். மன அழுத்தத்திலிருந்து நீங்கள் விடுபட்டால் இந்த மாதிரியான கேள்விகளுக்கும் எளிதில் உங்களால் பதில் அளிக்க முடியும்.
வருகின்ற பொதுப் தேர்வுகளை எதிர்கொள்ள இருக்கும் மாணவிகள் மாணவர்கள் அனைவரும் பரீட்சைக்கு பயமில்லை என்ற கையேட்டின் உதவியை பெற்றுக் கொள்ளலாம் என்றும் பிரதமர் வலியுறுத்தி இருக்கிறார். அதிகமான மன அழுத்தத்தில் நீங்கள் இருப்பதன் மூலமாக சரியாக தேர்வு எழுத முடியாமல் ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படலாம். எனவே மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: News