சென்னையில் இன்று இரவு 12 மணிவரை மெட்ரோ ரயில் இயங்கும்!

ஆயுதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதை முன்னிட்டு மக்கள் வெளிமாவட்டங்களுக்கு செல்ல இருப்பதால், சென்னையில் இன்று இரவு 12 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.;

Update: 2021-10-13 07:03 GMT
சென்னையில் இன்று இரவு 12 மணிவரை மெட்ரோ ரயில் இயங்கும்!

ஆயுதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதை முன்னிட்டு மக்கள் வெளிமாவட்டங்களுக்கு செல்ல இருப்பதால், சென்னையில் இன்று இரவு 12 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (அக்டோபர் 13) நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. பண்டிகைகள் தொடர்ந்த வருவதால் மக்கள் வெளியூர் செல்ல இருப்பதால் அவர்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று இரவு 12 மணிவரை நீட்டிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணம் செய்வதற்கு மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News