தமிழகத்தில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் இல்லை ! - ராதாகிருஷ்ணன் !
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்சிகள் போடப்பட்டு வரும் நிலையில், தற்போது உகாண்டா மற்றும் இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. இதனை கோவிஷீல்டு மருந்தை தயாரிக்கும் சீரம் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் கிளினிக்குகள், சுகாதார மையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தியுள்ளது.;
தமிழகத்தில் சுமார் 2.7 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்சிகள் போடப்பட்டு வரும் நிலையில், தற்போது உகாண்டா மற்றும் இந்தியாவில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது. இதனை கோவிஷீல்டு மருந்தை தயாரிக்கும் சீரம் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் கிளினிக்குகள், சுகாதார மையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழகத்தில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் எதுவும் இல்லை. எனவே மத்திய அரசு தொகுப்பில் இருந்துதான் தடுப்பூசிகள் பெறுகிறோம்.
மேலும், மகாராஷ்டிரா, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில்தான் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசிகள் வருகை அதிகமாக உள்ளது. ஆனால் மக்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்துவிட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா தொற்று வீரியம் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Topnews
Image Courtesy:Toptamilnews
https://www.toptamilnews.com/there-are-no-fake-covishield-vaccines-in-tamil-nadu-ias-radhakrishnan-info/