கொரோனா அச்சம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை.!
சென்னை, திமுல்லைவாயில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திமுல்லைவாயில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள திருமுல்லைவாயில் சோழம்பேடு சாலை பகுதியை சேர்ந்தவர் டெல்லி 74, அவரது மனைவி மல்லிகேஸ்வரி 64, மற்றும் மகள் நாகேஸ்வரி 34, ஆகிய 3 பேரும் அதே பகுதியில் வசித்து வந்தனர். டெல்லி முத்தா புதுப்பேட்டையை அடுத்துள்ள பாலவெட்டில் விவசாயம் செய்து வந்துள்ளார். தற்போது கொரோனா தொற்று காரணமாக வேலை இல்லாமல் வருமானம் இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.
மகள் நாகேஸ்வரிக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விவாகரத்தாகியுள்ளது. இதனால் குடும்பமே மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். இதனிடையே மூன்று பேருக்கும் காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.
இந்நிலையில், காய்ச்சல் அதிகமாக இருந்ததால், கொரோனா தொற்று வந்துவிட்டதோ என்ற அச்சத்தில் நேற்று இரவு மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் கிடைத்த திருமுல்லைவாயல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.