தருமபுரியில் விவசாயிகள் கூட்டுப்பண்ணையம்.. 2ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்.!

தருமபுரியில் விவசாயிகள் கூட்டுப்பண்ணையம்.. 2ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்.!

Update: 2020-12-07 14:42 GMT

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் சுப்ரமணிய சிவா கூட்டுப்பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் விவசாயிகள் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட பாலவாடியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தை சுப்ரமணிய சிவா கூட்டுப்பண்ணையத்தின் தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வேளாண்மை மற்றும் வணிகத்துறை உதவி அலுவலகர் சங்கர், டாடா மோட்டார்ஸ் கம்பெனி, செபா அக்ரிடெக் இயற்கை விவசாய நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் செயலாளர் கணபதி, பொருளாளர் தனசேகரன், மற்றும் இயக்குனர்கள் ரவி, முருகன், சிலம்பரசன், சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிலையில், சுப்ரமணிய சிவா கூட்டுப்பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின், பூ கடை, உரக்கடை, மரச்செக்கு எண்ணெய் ஆலையின் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு வரவு செலவினங்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் 700 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்கள் அனைவரும் இயற்கை விவசாயம் மற்றும் அரசு மானியங்கள், மதிப்புகூட்டு பொருட்கள், உழவன் செயலி ஆகியவை குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டம் சிறப்பாக நடைபெறுகிறது என்பது அரசு அதிகாரிகள் பலரும் பாராட்டினர். இறுதியாக இயக்குனர் அ.சிலம்பரசன் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் (எர்ரபையனஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர்) நன்றியுரை கூறினார். கொரோனா வைரஸ் தொற்றை முன்னிட்டு அனைவரும் முககவசம் அணிந்து கொண்டு பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News