திருக்கோவிலூர் அருகே உயர் கோபுரம் மின் கம்பத்தில ஏறி விவசாயிகள் போராட்டம்.!

திருக்கோவிலூர் அருகே உயர் கோபுரம் மின் கம்பத்தில ஏறி விவசாயிகள் போராட்டம்.!

Update: 2020-12-10 16:22 GMT

திருக்கோவிலூர் அருகே உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, உயர் மின்கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், புகளூர் மின் நிலையத்திலிருந்து, வேலூர் மாவட்டம், திருவளம் பகுதிக்கு உயர் மின் பாதை மணலூர்பேட்டை அடுத்துள்ள வடக்கு தாங்கல் வழியாக அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட எல்லையான வடக்குதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அய்யனார் 35, என்பவர் நிலத்தின் வழியாக குறிப்பிட்ட பகுதியில் தாழ்வாக அதாவது 12 அடி உயரத்தில் மின் அமைக்கப்படுகிறது.

இதன் மூலம் அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படக்கூடும் எனக்கூறி தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க மாநிலத் தலைவர் பலராமன் தலைமையில் வடக்குதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் உயர் மின் பாதை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, அய்யனார் 35, ரகோத்தமன் 32, ஆகியோர் பிற்பகல் 2:30 மணிக்கு உயர் மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்து வந்த திருக்கோவலூர் தாசில்தார் சிவசங்கரன், டி.எஸ்.பி., ராஜூ, இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பின்னர் 4:30 மணியளவில் இருவரையும் பத்திரமாக கீழே இறக்கி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். விவசாயிகள் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News