மாற்றுச் சான்றிதழ் இல்லாமலேயே மாணவர் சேர்க்கை.. கொந்தளிக்கும் தனியார் பள்ளிகள்.!

மாற்றுச் சான்றிதழ் இல்லாமலேயே மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகளின் சங்கங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Update: 2021-07-16 07:15 GMT

மாற்றுச் சான்றிதழ் இல்லாமலேயே மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகளின் சங்கங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத நிலையில், மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.


அது மட்டுமின்றி அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக மாற்று சான்றிதழ் தேவையில்லை என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு பின்னர் பல மாணவர்களை பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் சேர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில், மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர் சேர்க்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகளின் சங்கங்களின் தலைவர் அரசகுமார் தெரிவித்துள்ளார்.

Similar News