நீலகிரியில் மயக்க ஊசி செலுத்திய யானையை பிடிக்க விடாமல் பாதுகாத்த சக யானைகள்.!
நீலகிரியில் மயக்க ஊசி செலுத்திய யானையை பிடிக்க விடாமல் பாதுகாத்த சக யானைகள்.!;
மயக்க ஊசி செலுத்திய சங்கர் யானையை பிடிக்க விடாமல் பாதுகாத்த மற்ற யானைகளை பார்த்து வனத்துறையினர் வியந்து போயுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், சேரம்பாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 3 பேரை கொன்றது. இதனால் சங்கர் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி செய்தனர். இதன் பின்னர் யானையை பிடிப்பதற்காக கடந்த 5 நாட்களாக வனத்துறையினர் போராடி வந்தனர். ஆனாலும் சங்கர் யானையை பிடிக்க முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், 5-ஆவது நாளான நேற்று புஞ்சக் கொல்லி பகுதியில் சங்கர் யானை சக யானைகளுடன் நின்று கொண்டிருப்பதை வனத்துறையினர் பார்த்தனர். இதனையடுத்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனால் சக யானைகள் சுற்றி அரணாக நின்று வனத்துறையினர் நெருங்க விடாமல் பாதுகாத்து கொண்டது.
மேலும், மயக்கம் தெளியும் வரை காத்திருந்து சங்கர் யானையை மற்ற யானைகள் அழைத்து சென்ற சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 நாட்களாக வனத்துறையினர் எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.