கொரோனா மற்றும சாலை விபத்துகளால் உயிரிழந்த 50 காவலர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி.. முதலமைச்சர் அறிவிப்பு.!

கொரோனா மற்றும சாலை விபத்துகளால் உயிரிழந்த 50 காவலர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி.. முதலமைச்சர் அறிவிப்பு.!

Update: 2021-02-06 11:44 GMT

தமிழகத்தில் உடல்நலக்குறைவு மற்றும் விபத்தினால் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கின்போது பல விபத்துகளும், உயிரிழப்புகளும் நடைபெற்று வந்தது. அதே போன்று சாலை விபத்துகள் மற்றும் பாம்பு கடி உள்ளிட்டவைகளால் உயிரிழந்த குடும்பங்களுக்கும் முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

அதே போன்று கொரோனா சமயத்தில் காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் அனைவரும் தங்களின் உயிர்களை பணயம் வைத்து வேலை பார்த்து வந்த நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கும் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
 

 

Similar News