நெல்லை: கொரோனா விதிமுறைகள் பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டம் தோறும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டம் தோறும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு தமிழக அரசு பல்வேறு வகையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. ஆனால் பல்வேறு வணிக நிறுவனங்கள் அரசு உத்தரவை பின்பற்றுவதில்லை.
இந்நிலையில், திருநெல்வேலியில் முககவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த கடைகளுக்கு மண்டல சுகாதார அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் முருகன் ஆகியோர் அடங்கிய குழு கடைகளில் ஆய்வு மேற்கொண்டது.
அப்போது விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு அபதாரம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணியாமல் ஊழியர்கள் இருந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.