இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் - தமிழக கடலோர பகுதிகளில் முதல்முறையாக!

வாழ்விட இழப்பு காரணமாக அழிந்து வரும் கடற்பசுகளை காப்பதற்கான காப்பகம்.

Update: 2022-09-23 03:27 GMT

தமிழகத்தில் அழிந்து வரும் நிலையில் உள்ள மிக அரிய வகையான கடல் பசு இனத்தை மற்றும் அதன் வாழ்வையே வாழ்விடங்களை பாதுகாக்கும் பொருட்டு மன்னார் வளைகுடா பாக்விரிகுடா பகுதியில் கடற் பசு பாதுகாப்பாக அமைக்கப்படும் என்று தமிழக அரசால் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் வகையில் 448 கிலோமீட்டர்ஸ் சதுர பரப்பளவில் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் உள்ளடக்கிய விரிகுடா பகுதியில் கடல் பசு பாதுகாப்பாக அறிவித்து சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை 21ஆம் தேதி உத்தரவை பிறப்புக்கு உள்ளது.


உலகில் மிகப்பெரிய தாவர வகை கடல் பாலூட்டிக்காத கடற்பசு கடற் பொருட்களை உண்டு வாழ்ந்து வருகின்றன. கடற்பசு இனங்களையும் பாதுகாப்பதனால் கடல் அடியில் உள்ள கடற்கரை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வளிமண்டல கார்பனை அதிக அளவில் நிலைப்படுத்தவும் உதவுகிறது. கடற் புழு படுக்கையில் வணிகரீதியான மதிப்பு மிக்க பல மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு இனப்பெருக்கம் செய்ய ஏதுவாகவும் உணவளிக்கும் இடமாக உள்ளது. பாக்விரிகுடாவில் அதனை ஒட்டி உள்ள கடலோடு மக்கள் கடல் பசு பாதுகாப்பு பாதுகாப்பதன் அவசியத்தை புரிந்து கொண்டு பலமுறை மீன்பிடி வலைகளில் சிக்கிய கடற் பசுக்களை மீனவர்கள் வெற்றிகரமாக கடலில் விடுத்துள்ளார்கள்.


எனவே அழிவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய கடல் பசுக்களை காப்பதற்காக தற்போது பாதுகாப்பகம் ஒன்று தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது. தமிழகம் அறிவிக்கை செய்துள்ள இந்த கடற்பசு பாதுகாப்பகம் இந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்படும் பாதுகாப்பகம் என்றும் பெருமையாகும். இதனால் தமிழ்நாட்டின் மட்டுமல்லாது உலகமெங்கும் உள்ள வன உயிரின பாதுகாவலர்கள் அனைவரும் பெருமை கொள்வார்கள். இது நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கிய அம்சமாகும்.

Input & Image courtesy: Vikatan News

Tags:    

Similar News