குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்க ரூ.5 லட்சம் கேட்கும் அதிகாரிகள் - புலம்பும் மீனவர்கள்

Update: 2022-04-18 13:54 GMT

சென்னை, மயிலை நொச்சிநகர் மீனவ குப்பத்தில் வசித்து வரும் மக்களுக்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக 1,188 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

இந்த வீடுகள் அந்த மீனவர்களுக்கு மட்டுமின்றி பட்டினபாக்கத்தை சேர்ந்த மீனவர்களுக்காகவும் ஒதுக்கப்படுவதாக தகவல் கசிந்தது. இதனை கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்த மயிலை, நொச்சிநகர் மீனவர்கள் இன்று (ஏப்ரல் 18) திடீரென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உட்பட 100க்கும் அதிகமானோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், எங்களுக்கு ஒதுக்கப்படும் வீடுகளுக்கு ரூ.1.30 லட்சம் தான் வசூலிக்க வேண்டும். ஆனால் ரூ.5 லட்சம் வரை கேட்கின்றனர் என்ற கோஷத்தை எழுப்பினர். இதற்கு உடனடியாக அரசு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்தனர்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News