தி.மு.க அரசின் அலட்சியம்: நடவு செய்த பயிர்கள் வெள்ளத்தால் மூழ்கியது! கண்ணீர் விடும் டெல்டா விவசாயிகள்!

டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் நடவு செய்த பயிர்கள் அனைத்தும் மழைநீரால் மூழ்கியுள்ளது. சரியாக ஓடைகள் மற்றும் நீர் செல்லும் வழித்தடங்களை சீர்செய்யாமல் விட்டதே இதற்கு காரணம் என்று விவசாயிகள் கண்ணீருடன் கூறியுள்ளனர்.

Update: 2021-11-11 11:56 GMT

டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் நடவு செய்த பயிர்கள் அனைத்தும் மழைநீரால் மூழ்கியுள்ளது. சரியாக ஓடைகள் மற்றும் நீர் செல்லும் வழித்தடங்களை சீர்செய்யாமல் விட்டதே இதற்கு காரணம் என்று விவசாயிகள் கண்ணீருடன் கூறியுள்ளனர். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை நீடித்து வருகிறது. இதனால் திருச்சி, பெரம்பலூர் பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது.


இதனால் நடவு செய்த பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. நீர் செல்வதற்கான வடிகால் வசதி இல்லாததால் நெல் மற்றும் வாழை உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. இந்த மழைநீரில் சுமார் 800 ஏக்கர் நெல் மற்றும் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். மேலும், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் நெல் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. அதே போன்று அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட பல கிராமங்களிலும் நெல் மற்றும் வாழை பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.


நடவு செய்து ஒரு மாதமான நெற்பயிற்கள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், முசிறி, தொட்டியம் உள்ளிட்ட இடங்களிலும் வயல்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்துள்ளது. தேங்கிய மழைநீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் நீர் செல்லும் வாய்க்கால்களை தூர்வாராமல் விடப்பட்டுள்ளது. இதனால் பெய்து வரும் மழைநீர் அனைத்தும் வயல்களில் நுழையும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். 

Source, Image Courtesy: Vikatan


Tags:    

Similar News