பாலாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்: ஒரு லட்சம் கனஅடி நீர் வீணாக கடலுக்கு செல்கிறது!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் கடந்த 1903ம் ஆண்டுக்கு பின்னர் வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வீணாக சென்று கடலுக்கு செல்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் கடந்த 1903ம் ஆண்டுக்கு பின்னர் வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வீணாக சென்று கடலுக்கு செல்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகம் மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு கரைகளையும் தொட்டபடி நீர் செல்கிறது. இதனை பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் சென்று பார்த்து வருகின்றனர்.
பாலாற்றில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தீயணைப்பு மீட்பு துறையும், மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து மீட்டு வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓடும் பாலாற்றில் சுமார் ஒரு மாதமாக வெள்ளநீர் ஆர்ப்பரித்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamalar