மகாசிவாராத்திரி எதிரொலி: பூக்கள் விலை உயர்வு.!

இன்று இந்துக்களால் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு ஊர்களில் உள்ள சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் இரவு முழுவதும் நடைபெறும்.

Update: 2021-03-11 12:29 GMT

இன்று இந்துக்களால் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு ஊர்களில் உள்ள சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் இரவு முழுவதும் நடைபெறும்.

பூஜைக்கு அதிகளவிலான பூக்கள் தேவைப்படுகிறது. இதனால் பூக்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இன்று மகாசிவராத்திரி மட்டுமின்றி திருமண விஷேஷங்களும் வருகிறது. இதனால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தருமபுரி, ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் பூக்களை அதிகளவு விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இங்கிருந்து விளைகின்ற பூக்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இன்று மகாசிவராத்திரியால் பூக்கள் அதிகளவு தேவைப்படுகிறது. இதனால் பூக்களின் விலையை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




 


அதாவது கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 50 முதல் 100 ரூபாய் வரை விற்பனையான சம்பங்கி பூ இன்று விலை உயர்ந்து ஒரு கிலோ 220 முதல் 250 வரை உயர்ந்துள்ளது. சம்பங்கி பூக்கள் மாலைக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் பூ ஆகும். அதே போன்று மற்ற பூக்கள் விலையும் அதிகரித்துள்ளது.

Similar News