கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட ஒரு மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து தமிழகத்திலும் விற்பனை செய்யப்படும் கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் தரத்தை கண்டறிந்து வருகின்றனர். அதே போன்று கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள், மாநகர பகுதியில் கடந்த 2 நாட்களாக தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது: நாகர்கோவில் மாநகர பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக அசைவ ஓட்டல்கள் மற்றும் ஷவர்மா கடைகளில் உணவு தரம் பற்றி சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரையில் 32 ஷவர்மா கடையிலும், 4 அசைவ ஓட்டல்களிலும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தரமற்ற நிலையில் இருந்த 5 கிலோ இறைச்சி மற்றும் ஷவர்மா வைப்பதற்கு பயன்படுத்தப்படும் குக்கூஸ் 50க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ஷவர்மா கடைகளில் உணவு பொருட்களை கடைக்கு வெளியில் வைக்கக்கூடாது. அசைவ கடைகள் அனைத்தும் உரிமம் பெற்ற பின்னரே இயங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Malaimalar