வரலாற்றிலேயே முதன் முறை.. தமிழர் பண்டிகையான பொங்கலுக்கு உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை.!
வரலாற்றிலேயே முதன் முறை.. தமிழர் பண்டிகையான பொங்கலுக்கு உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை.!
உச்சநீதிமன்றத்திற்கு வரும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 14 மற்றும் 15ம் தேதிகளில் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, தமிழர் பண்டிகையான பொங்கலுக்கும் உச்சநீதிமன்றம் வேலை நாட்களாக இருக்கும். இந்நிலையில் வரலாற்றில் முதன் முறையாக, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் வருடத்தில் 191 நாட்கள் மட்டுமே இயங்கும். 174 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அது மட்டுமின்றி ஒவ்வொரு திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் நீதிமன்றம் மதியம் ஒரு மணிக்கே அடைக்கப்பட்டு விடும்.
பக்ரீத், ரம்ஜான், ஈத் உல் ஃபிதர் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. எனவே தமிழர் திருநாளுக்கும் விடுமுறை விட வேண்டுமென பல நாட்களாகவே கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை வரும் 2021-ம் ஆண்டு தான் நடமுறைக்கு வருகிறது. பொங்கல் பண்டிகை அன்று உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளிப்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.