தேர்தலுக்கு முன்பே தி.மு.க இதை சொல்லவில்லை... ஏமாற்றப்பட்ட மக்கள்... அ.தி.மு.க குற்றச்சாட்டு?
தகுதி படைத்த பெண்களுக்கு தான் ஆயிரம் என்று தேர்தலுக்கு முன்பை தி.மு.க ஏன் கூறவில்லை?
தி.மு.கவிற்கு இரட்டை நாக்கு உள்ளது என்றும், தகுதி படைத்த பெண்களுக்கு தான் ரூபாய் 1000 என்றும் தேர்தலுக்கு முன்பே சொல்லி இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார் குற்றம்சாட்டி இருக்கிறார். அ.தி.மு.கவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி மதுரை மேற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு மற்றும் புதிய உறுப்பினர்களுக்கான செயற்கை ஆகியவை நடக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறும் பொழுது, அ.தி.மு.க ஆட்சியாக இருக்கும்பொழுது சட்டசபையில் தி.மு.க உறுப்பினர்களுக்கு இரண்டு மணி நேரம் பேசுவாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆனால் தற்பொழுது அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு இரண்டு நிமிடம் கூட பேச வாய்ப்பு அளிக்கப் படவில்லை மறுக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் வரிப்பணம் மூலம் இயங்கும் சட்டமன்றம் பஜனை மடமாக மாறி போய்விட்டது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி ஆகியோருக்கு தி.மு க மூத்த அமைச்சர்கள் முதல் தி.மு.க உறுப்பினர்கள் வரை புகழ் பாடும் மன்றமாக தான் சட்டசபை தற்போது இருக்கிறது. மேலும் தேர்தல் அறிக்கையின் போது அனைத்து மகளிருக்கும் ஆயிரம் என்று கூறினார்கள்.
ஆனால் தற்பொழுது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்றும் மறுக்கிறார்கள். ஏன் தேர்தல் அறிக்கையில், தகுதி உள்ளவர்களுக்கு ரூபாய் ஆயிரம் மாதம் வழங்கப்படும் என்று அவர்கள் கூறவில்லை, அப்போதே கூறியிருந்தால் அவர்களுடைய தகுதி என்ன என்பதை தேர்தலிலேயே மக்கள் காட்டி இருப்பார்கள். ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என்று இரட்டை நாக்குயுடன் தி.மு.க பேசி வருகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News