அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் கொரோனாவால் உயிரிழப்பு.!
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் 93, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் 93, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
கான்பூர் ஐஐடியின் தலைவராகவும், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் தலைவராகவும் இருந்தவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அனந்தகிருஷ்ணன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.