தமிழகத்தில் துணை வேந்தர் பதவி 50 கோடிக்கு விற்கப்பட்டது - முன்னாள் கவர்னர் அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 50 கோடிக்கு விற்கப்பட்டது இன்று முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தகவல்.

Update: 2022-10-23 23:32 GMT

தமிழ்நாட்டில் 2017 -21 ஆம் காலகட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியின் போது கவர்னர் ஆக இருந்தவர் பன்வாரிலால் புரோகித். தற்பொழுது அவர் பஞ்சாப் கவர்னர் கவர்னர் ஆக இருந்து வருகிறார். அங்கு அவருக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இந்நிலையில் லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக டாக்டர் சந்திப்பீர் சிங் கோஷல் நியமிக்கப்பட்டு, மாநில அரசுடன் அவருக்கு முதல் ஏற்பட்டுள்ளது.இந்த நியமனம் சட்டவிரோதமானது என்று புரோகித்துக் கூறியிருக்கிறார்.


ஆனால் மாநில நிதி மந்திரி சீமா மாநிலத்தை ஆள்வதற்கு எங்கள் மக்கள் உத்தரவு அளித்துள்ளார்கள். அரசின் பணிகளை கவர்னர் தடை செய்யக்கூடாது. பா.ஜ.கவுக்காக வேலை செய்யாதீர்கள், அரசியல் சாசனம் வழங்கியுள்ள பொறுப்புகளை நிறைவேற்றுங்கள் என்று கவர்னரை கேட்டுக்கொள்கிறேன் என கூறியிருக்கிறார். அதையொட்டி நேற்று முன்தினம் கவர்னர் புரோகித் சண்டிஸ்கரில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகள் கவர்னராக இருந்து போது, அங்கு நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அங்கு துணை வேந்தர் பதவிக்கு 40 கோடி முதல் 50 கோடி வரையிலான விற்பனையானது.


நீங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்கலாம்..அவர் தமிழ்நாட்டின் கல்வி நிலையில் என்னை பாராட்டினார். கவர்னராக இருந்தபோது சட்டப்படி 27 துணை வேந்தர் நியமனம் செய்திருக்கிறேன். வேலை எப்படி நடக்கிறது என்பதை நாங்கள் அவர்கள் என்னிடம் கற்றுக் கொள்ள வேண்டும். பஞ்சாபில் யார் திறமையானவர்? யார் திறமை இல்லாதவர்? என்பது கூட எனக்கு தெரியாது கல்வியில் முன்னேற்றம் அடைய காண விரும்புகிறேன். பஞ்சாப் அரசு பல்கலைக்கழக செயல்பாடுகளில் கவர்னர்கள் தலையிடுகிறார்கள் எனக் கூறுகிறது. பல்கலைக்கழகங்களில் வேந்தர் எனும் முறையில் முடிவு எடுக்கும் அதிகாரம் கவர்னருக்கு தான் உண்டு. உள்ள படியே பல்கலைக்கழகங்களில் செயல்பாடுகளில் மாநில அரசு தலையிட முடியாது என்று அவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News