முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி.!

முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி.!

Update: 2021-02-16 12:40 GMT

சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் நீதிபதி கர்ணன். இவர் சமீபத்தில் நீதிபதிகளை குறித்து அவதூறாக பேசிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. மேலும் நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். இது மிகவும் நீதிமன்ற ஊழியர்களிடையே மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

இதனிடையே முன்னாள் நீதிபதி கர்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இதனிடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், தனக்கு ஜாமீன் அளிக்கக்கோரி கர்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கர்ணனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

Similar News