முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.!
கொரோனா நேரத்தில் பணியாற்றி வரும் முன்களப் பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
கொரோனா நேரத்தில் பணியாற்றி வரும் முன்களப் பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகாமையில் இருக்கு பா.வெள்ளாளப்பாளையம் ஊராட்சியில் பணிபுரிந்து வரும் 16 தூய்மை பணியாளர்களுக்கு, அரிசி, காய்கறி, மற்றும் மாத்திரை உள்ளிட்ட நிவாரண பொருடகளை இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
இதனை தொடர்ந்து வெள்ளாளப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினார். மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.