அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.20 லட்சம் மருத்துவ உபகரணங்கள்.. முன்னாள் அமைச்சர் வழங்கினார்.!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தங்கமணி வழங்கினார்.

Update: 2021-06-01 08:19 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான தங்கமணி வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் எம்.எல்.ஏ.வுமான தங்கமணி கலந்து கொண்டார்.

எம்.எல்.ஏ., தங்கமணி தனது சொந்த செலவில் ரூ.20 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள், என்95 முககவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் முன்னிலையில் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கவுன்சிலர், மற்றும் சேர்மன் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News