ஓசி பேருந்து பயணம்... அன்று அமைச்சர், இன்று நடத்துனர்... வேதனை தெரிவிக்கும் கூலி பெண் தொழிலாளிகள்!

தற்போது கடலூர் மாவட்டத்தில் பொதுப் பேருந்தில் ஓசியில் பயணம் செய்யும் பெண்கள் ஏற வேண்டாம் என்று கண்டக்டர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Update: 2023-04-11 03:46 GMT

கடலூர் மாவட்டம் புவனகிரி ஓசி டிக்கெட் எனக் கூறி அரசு பேருந்து தங்களை ஏற்ற மறுத்ததாக பெண் கூலித் தொழிலாளிகள் மிகவும் வேதனையாக தெரிவித்து இருக்கிறார்கள். குறிப்பாக புவனகிரி புது பாலம் பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகளுக்கு சென்று திரும்பிய பெண் கூலித் தொழிலாளிகள் பேருந்துக்காக அந்த பகுதிகளில் பல மணி நேரம் காத்திருந்தார்கள். அப்பொழுது குறிஞ்சிப்பாடி செல்லும் அரசு பேருந்தில் அவர்கள் ஏற முயன்ற போது, அவர்களை ஏறவிடாமல் நடத்துனர் தவறுதலான செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்.


குறிப்பாக அரசு பேருந்து ஏறுகின்ற பெண்களை ஓசி டிக்கெட் எனக் கூறி, நடத்துனர் ஒருமையில் பேசியது தங்களுக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்து பெண் தொழிலாளிகள் கருத்து தெரிவிக்கும் வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் நாங்கள் இப்பொழுது இலவச பேருந்து பயணம் கேட்டோமா? எங்களுக்கு ஏன் இப்படி இலவச பேருந்து பயணத்தை கொடுத்துவிட்டு, மனதை புண்படுத்தும் படியா பேசுகிறீர்கள் என்று அழுகாத குறைய அவர்கள் தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.


இது இப்போது மட்டும் நடந்த சம்பவம் கிடையாது. இதற்கு முன்பு பலமுறை இந்த மாதிரியான சம்பவங்கள் அரங்கேறி இருக்கிறது. குறிப்பாக தி.மு.க அமைச்சர் பொன்முடி அவர்கள் பொதுக் கூட்டத்தின் பொழுது அங்கு அமர்ந்திருக்கும் பெண்களை நோக்கி ஓசியில் தானே பயணம் செய்தீர்கள்? என்று கேள்வியை எழுப்பினார். அப்பொழுது இருந்து பல்வேறு தரப்பினர்களும் பெண்களை பார்த்து ஓசியில் தான் பயணம் செய்தீர்கள் என்று நக்கல் ஆகவும் கேலியாகவும் விமர்சனங்களை செய்து வருகிறார்கள்.

Input & image courtesy: News

Tags:    

Similar News