தமிழக மாணவர்களுக்கு லேப்டாப் இருக்கிறதா? இல்லையா? தி.மு.க அரசின் பதில் என்ன?
பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் லேப்டாப் குறித்து பள்ளி கல்வித்துறை எதுவும் கூறவில்லை.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் கீழ் 48 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெற்று இருக்கிறார்கள். குறிப்பாக அவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்பட்டு இருக்கிறது.
பின்னர் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக லேப்டாப் கொள்முதல் செய்வதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதற்காக உபகரணங்கள் வாங்குவதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாகவும் மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்து வருகிறது. மேலும் இதற்கிடையில் லேப்டாப் வழங்கும் திட்டத்தை கைவிட்டு கைவிடப்பட்டது அரசு என்ற பல்வேறு கேள்விகளும் எழுந்து வருகிறது.
சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை தொடர்பான கொள்கை குறிப்பில் மாணவ, மாணவிகளுக்கான இலவச லேப்டாப் தொடர்பான எந்த ஒரு தகவல்களும் விவரங்களும் அதில் இடம்பெறவில்லை. இதில் பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தக பை, காலனிகள் உள்ளிட்ட 14 வகையான நலத்திட்டங்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச லேப்டாப் கைவிடப்பட்டதா? என்ற ஒரு கேள்வியும் எழுகிறது.
Input & Image courtesy: News