தடுப்பூசி போட்டுக்கொண்ட கிராம மக்களுக்கு இலவச முட்டை விநியோகம்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு தொடங்கியது. இன்று வரை தடுப்பூசி போடும் பணி தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது.

Update: 2021-06-18 13:21 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகங்காத்தான் என்ற கிராமத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவசமாக கோழி முட்டைகள் வழங்கிய சம்பவம் தடுப்பூசி போடுபவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு தொடங்கியது. இன்று வரை தடுப்பூசி போடும் பணி தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது.


 



அந்த வகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் கிராம மக்களிடம் தற்போது விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கிராமத்தின் ஒளி தொண்டு நிறுவனமும் இணைந்து 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தியது. அப்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உயிருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டது. மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏராளமானோர்கள் கூடியிருந்தனர்.




 


தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கோழி முட்டைகள் வழங்கப்பட்டது. இதனால் தடுப்பூசி போடுபவர்களுக்கு ஆர்வர் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Similar News