முதியவர்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம்.. இன்று முதல் டோக்கன் விநியோகம்.!
முதியவர்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம்.. இன்று முதல் டோக்கன் விநியோகம்.!
முதியவர்களுக்கு கட்டணமில்லா பயணம் மேற்கொள்வதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க பாஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி மாணவர்கள் அரசுப்பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போன்று தமிழகத்தில் உள்ள முதியவர்களுக்காகவும் தமிழக அரசு திட்டம் தீட்டியது. 60 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கும் கட்டணமில்லா பேருந்து சேவையை பெறலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி சென்னையில் இன்று முதல் இலவச டோக்கன் விநியோகம் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.