இனிமேல் பேருந்தில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்தலாம்.. தமிழக அரசு.!

இனிமேல் பேருந்தில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்தலாம்.. தமிழக அரசு.!

Update: 2020-12-08 07:35 GMT

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவம் 50 சதவீத இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது பேருந்துகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான பயணிகள் பேருந்து சேவையை நம்பியே உள்ளனர். இதனால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்று படிப்படியாக தமிழகத்தில் குறைந்து வருகிறது. இதனையடுத்து அரசு பல்வேறு தளர்வுகளை தளர்த்தி வருகிறது.

இந்நிலையில், அனைத்து பேருந்துகளிலும் 100 சதவீத இருக்கைகள் முழுவதும் பயணிகளை ஏற்றிச்செல்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது மட்டுமின்றி கூடுதலாக பேருந்து சேவையை இயக்கவும் அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி கல்லூரி பேருந்துகளில் நூறு சதவீத இருக்கைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது தெரியவந்துள்ளது. இனிமேல் பழைய மாதிரி பேருந்துகளில் கூட்டம் அலை மோதும் என்று தெரிகிறது.

Similar News