ஜி ஸ்கொயர் வழக்கு திடீர் மாற்றம்: மாரிதாஸ், சவுக்கு சங்கர் பெயர்கள் திடீர் விடுவிப்பு ஏன்?

Update: 2022-06-05 02:50 GMT
ஜி ஸ்கொயர் வழக்கு திடீர் மாற்றம்: மாரிதாஸ், சவுக்கு சங்கர் பெயர்கள் திடீர் விடுவிப்பு ஏன்?

ஜூனியர் விகடன் வார இதழ் தற்போது ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராமஜெயம் என்கின்ற பாலா மீது புகார் அளித்தது. ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் என்ற ரியல் எஸ்டேட் தனியார் நிறுவனம் அதன் நிறுவனர் ராமஜெயம் சார்பில் மே 21ம் தேதி புருஷோத்தம் குமார் என்ற தனிநபர் அளித்த புகாரின் பேரில் இந்த பிரச்சனை பூதாகரமானது.

இப்புகார் அளித்த புருஷோத்தம், கடந்த ஜனவரி 18ம் தேதி ராமஜெயத்திற்கு கெவின் என்ற நபரிடமிருந்து தொலைபேசி மூலம் அழைப்புகள் வந்ததாகவும், அவர் விகடன் குழுமத்தின் இயக்குநர்களுடன் நெருங்கிய கூட்டாளி கூறியதாக கூறினார்.

மேலும் ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனம் பற்றிய செய்தியை செய்தித்தாள்களில் வெளியிடுவதை நிறுத்துவதற்காக கெவின் அந்த பத்திரிகை சார்பாக ரூ.50 லட்சம் கேட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் புருஷோத்தம் பணம் அளிக்க முடியாது என்று சொல்லியதை தொடர்ந்து, ஜனவரி 23, 2022ல் ஜூவியில் அது தொடர்பான கட்டுரை ஒன்று வெளியானது. அதில் ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனத்திற்கும் தி.மு.க.வுக்கும் தொடர்பு இருப்பதாகவும், பல அரசு அதிகாரிகளின் துணையுடன் சுமூகமாக செயல்பட உதவினார்கள் என்று அக்கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. மேலும், அப்புகாரில் பணம் கொடுக்கவில்லை எனில் சவுக்கு சங்கர், மாரிதாஸ் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் செயல்படுபவர்களிடம் ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனத்தைப் பற்றி அவதூறாக செய்தி எழுதுவதற்கு சொல்வதாகவும், கெவின் மிரட்டியதாகவும் புருஷோத்தம் சார்பில் புகார் சாட்டினார்.

இந்நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் கடந்த மே 22ம் தேதி மயிலாப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட கெவின் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் கெவினுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஜூனியர் விகடன் உறுதிப்பட கூறியது. மேலும், ஜூவி சார்பில் கெவின், ராமஜெயம் உள்ளிட்டோர் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மே 25ம் தேதி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் இந்த வழக்கில் முதற்கட்டமாக விசாரணை முடிவடைந்துள்ளது. அதன்படி கெவின் என்பவர் ரூ.50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அந்த பத்திரிகையில் பணியாற்றும் சிலருடன் பணப் பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளது. இருந்த போதிலும் ஜூவி நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என தெரியவந்துள்ளது. எனவே இப்புகாரின்படி முதல் தகவல் அறிக்கையில் இருந்து நீக்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் இவ்வழக்கில் இருந்து ஜூவி இயக்குநர்கள் மற்றும் யூடியூபர் மாரிதாஸ், சவுக்கு சங்கர் உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் வேறு சிலர் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.

Source, Image Courtesy: Asianetnews

Tags:    

Similar News