ஜீ ஸ்கொயர் ஆக்கிரமிப்பு: கோவில் நிலத்தை காப்பாற்ற போராடும் இந்து முன்னணி!

ஜீ ஸ்கொயர் வீட்டுமனை கால்வாய் பகுதிகளை கோவில் நிலத்தில் விடுவதற்காக ஆக்கிரமிப்பு நடத்தப்பட்டுள்ளது.

Update: 2022-11-26 04:48 GMT

செங்கல்பட்டு மற்றும் பள்ளிக்கரணையில் சுமார் 1000 வருடம் பழமையான பாரம்பரியமிக்க லட்சுமி நாராயண கோவில் இருக்கிறது. இந்த கோவில் இருக்கும் இடத்தில் ஜீ ஸ்கொயர் எனப்படும் வீட்டுமனை கட்டுமானம் அமைந்திருக்கிறது. குறிப்பாக இந்த வீட்டு மனை கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் விற்பனை செய்து இருக்கிறார். இந்த வீடுகளுக்கான கால்வாயினை கோவில் நிலத்தில் பின்புறத்தில் திருப்பி விடுவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கோவில் சுற்றி சுவர் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


G square ஆக்கிரமிப்பு போராட்டக்களத்தில் இந்துமுன்னணி கட்சியை சேர்ந்த பல்வேறு பொதுமக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த மனைக்கான கால்வாயை கோயில் இடத்தில்  திருப்பி விடுவதற்காக கோவில் காம்பவுண்ட் சுவரை உடைத்து அதிகாரிகள் துணையோடு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு குழி தோண்டி வேலை ஆரம்பிக்கப்பட்டது.



பல புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களும், இந்து முன்னணியும் சேர்ந்து ஆர்ப்பாட்டம ஒன்றை தற்போது நடத்தி இருக்கிறார்கள். புகார்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தற்போது வரை தெரியவில்லை. இந்து சமய அறநிலையத்துறை என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா ? என்ற கேள்வியும் பொதுமக்களிடம் எழுந்து இருக்கிறது. விரைவில் இதற்கான ஒரு முடிவை இந்து சமய அறநிலையத்துறை எடுக்க வேண்டும். 

Input & Image courtesy: Twitter

Tags:    

Similar News