திருப்பூரில் நாகாத்தம்மன் கோயில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம கும்பல்!
திருப்பூர், யாசின் பாபு நகர் செல்லும் வழியில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோயில் இருக்கிறது. நேற்று இரவு இந்த கோயிலுக்கு வந்த மர்ம கும்பல் விநாயகர், மற்றும் கருப்பராயன் சாமி சிலைகளை அருகில் இருந்த வேல் உள்ளிட்டவைகளை உடைத்து விட்டு சென்றுள்ளது.

இன்று காலை கோயிலுக்கு வந்த பூசாரி நாகராஜ், சிலைகள் மற்றும் வேல் உள்ளிட்டவைகள் சேதப்படுத்தியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது பற்றி தகவலை கேள்விப்பட்டதும் இந்து முன்னணி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதன் பின்னர் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரை தொடர்ந்து சம்பவ சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாசில்தார் மற்றும் இன்ஸ்பெக்டர் ரமேஷ், நல்லூர் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இந்து பிரமுகர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். கோயிலை சேதப்படுத்தியவர்களை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்துள்ளனர். மேலும், கோயிலுக்கு வந்த கும்பல் சேதப்படுத்த வந்ததா அல்லது கொள்ளையடிக்கின்ற நோக்கில் வந்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
Source, Image Courtesy: Maalaimalar