சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு.!

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.825 இல் இருந்து ரூ.850 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-07-01 04:06 GMT

வீடுகளில் பயன்படுத்தப்படும் மானிய சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




 


சர்வதேச சந்தைக்கு ஏற்ப இந்தியாவில் எரிபொருள் விலை மாறுபடுகிறது. அந்த வகையில் சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுபடும். அந்த வகையில் தற்போது சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.




 


இந்நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.825 இல் இருந்து ரூ.850 ஆக உயர்ந்துள்ளது.

Similar News