பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கிறிஸ்தவ சபை: பொதுமக்கள் போராட்டம்!
பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கிறிஸ்தவ சபை பாதி அமைக்க முயன்றதாக பொதுமக்கள் போராட்டம்.
கரூர் அமராவதி ஆற்றப்படுகை ஓரம் அமைந்துள்ள பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கிறிஸ்தவ சபை ஒன்று பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதிகள் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருமாலையில் அமராவதி ஆற்று படுக்கை ஓரம் கிறிஸ்தவ சபை ஒன்று கடந்த 5 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்த சபை ஒட்டி உள்ள திருமண நிலையம் சாணப்பிராட்டி ஆகிய கிராமங்களுக்கு விவசாயம் தேவைக்கான பாசன வசதி தரக்கூடிய ராஜகால் வாய்க்கால் செல்கிறது. சுமார் 15 அடி அகலம் கொண்ட இந்த ராஜ வாய்க்கால் பகுதியில் ஐந்து அடி அகலத்திற்கு கடந்த சில இடங்களுக்கு முன்பு பொக்லைன் இயந்திரங்களில் கொண்டு மணலை கொட்டி ஆக்கிரமித்து கிறிஸ்தவ சபைக்கு செல்வதற்காக பாதை அமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாக்கின.
இதனை தொடர்ந்து அந்த பகுதியை மக்கள் பாதிரியார் மற்றும் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் கிறிஸ்துவ சபை சார்பில் முறையான பதில் அளிக்கவில்லை. இதன் காரணமாக பாசன வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமித்து பாதி அமைக்கும் இந்த சபையை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். குறிப்பாக காவல்துறையில் இந்த ஆக்கிரமிப்பு உண்மைதானா? என்பது தொடர்பான விசாரணைகளும் நடைபெற்று வருகிறது.
Input & Image courtesy:Samayam News