"குடிச்சுட்டு கல்லூரி வர்றங்கப்பா, அந்த டாஸ்மாக் மூடுங்க நல்லா இருப்பீங்க!" கெஞ்சும் கல்லூரி முதல்வர், பெற்றோர்கள் - அரசு கல்லூரியின் கொடுமை

கல்லூரிக்கு அருகிலேயே மதுக்கடை இருப்பதால் மது அருந்திவிட்டு மாணவர்கள் கல்லூரிக்கு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

Update: 2022-09-29 05:15 GMT

கல்லூரிக்கு அருகிலேயே மதுக்கடை இருப்பதால் மது அருந்திவிட்டு மாணவர்கள் கல்லூரிக்கு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.



தமிழகத்தில் மது ஒழிப்பு கோரிக்கை சமீபத்தில் கடுமையாக எழுந்து வருகிறது. ஆளும் அரசும் மது ஒழிப்பை தேர்தல் வாக்குறுதியாக அளித்தே ஆட்சிக்கு வந்தது. ஆனால், தமிழகத்தில் மது கடைகளின் எண்ணிக்கையும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. தற்போது போதை பழக்கம் மாணவர்களிடையே அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் சாலையில் தகராறு செய்வது, ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம், தலைவாசல், வடசென்னிமலையில் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி அமைந்துள்ளது.

இந்த கல்லூரியில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் 1 கிலோ மீட்டர் தொலைவிலேயே மதுபான கடை ஒன்ரு உள்ளது. இந்த மதுபான கடையால் அந்த கல்லூரி மாணவர்கள் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக அங்குள்ளவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வகுப்பு நேரங்களிலேயே அவர்கள் மது அருந்திவிட்டு வகுப்பிற்குள் வருவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில், கல்லூரி, பள்ளி அமையப்பெற்றிருக்கும் பகுதிகளின் அருகில் டாஸ்மார்க் கடைகள் அமைந்திருப்பதால் அங்குள்ள மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகியுள்ளனர். இதனால், பெண் பிள்ளைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்பவே அச்சமாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

அந்த கல்லூரி முதல்வர் தெரிவிக்கையில், இங்கு கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் பயின்று வருகின்றனர்.வரும்பாதையில் கல்லூரிக்கு அருகில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருவதால் அவர்கள் மது அருந்திவிட்டு வருகின்றனர். மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் எந்த பயனும் இல்லை. மதுபோதையில் மாணவர்கள் சமூக விரோத செயல்களிலும், ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் மதுபோதையில் அதிக அளவு குற்ற சம்பவங்கள் ஏற்படுவதால் மாணவ மாணவிகளின் நலன் கருதி மதுபான கடையை மூட மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இது பற்றி பேசும்போது இது குறித்து தாசில்தார் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். உண்மையிலேயே பிரச்னைக்குரிய இடத்தில் இருந்தால் உடனடியாக அந்த மதுபான கடை அகற்றப்படும் என தெரிவித்தார். மதுவால் தமிழகத்தில் பல் குற்றசம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், கல்லூரிக்கு அருகிலேயே மதுபான கடை அமைத்து மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Source - Junior Vikatan

Similar News