சிறுமி பாலியல் வன்கொடுமை.. புதுக்கோட்டை குற்றவாளிக்கு மரண தண்டனை.!
சிறுமி பாலியல் வன்கொடுமை.. புதுக்கோட்டை குற்றவாளிக்கு மரண தண்டனை.!
புதுக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தது மகிளா நீதிமன்றம்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள ஏம்பல் கிராமத்தில் கடந்த ஜூன் 30ம் தேதி 7 வயது சிறுமி காணாமல் போனதாக அவருடைய பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியை தேடிவந்த நிலையில், ஜூலை 1ம் தேதியன்று ஒரு முட்புதருக்குள் சிறுமி இறந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டார். சிறுமியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில் குற்றவாளியான ராஜா (எ) சாமுவேல் கைது செய்யப்பட்டார். அவர்மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
அந்த வழக்கு விசாரணை புதுகோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி சாமுவேலுக்கு 3 பிரிவுகளில் மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்தியா பரபரப்பு தீர்ப்பை வழங்கினார்.
இந்த தண்டனைக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். உடனே குற்றவாளியை தூக்கிலட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.