தாலிக்கு தங்கம் திட்டம்: லண்டன் மார்க்கெட்டிலிருந்து உலகத்தரம் வாய்ந்த தங்கம் கொள்முதல் செய்யும் தமிழகம்!

தாலிக்கு தங்கம் திட்டம்: லண்டன் மார்க்கெட்டிலிருந்து உலகத்தரம் வாய்ந்த தங்கம் கொள்முதல் செய்யும் தமிழகம்!

Update: 2021-01-12 09:15 GMT

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.726 கோடிக்கு தங்கம் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தெரிவித்தார்.

பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் மானிய விலையில் வழங்கும் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை ரூபாய் 740 கோடி மானியமாக அளிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 85 ஆயிரம் பெண்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

பெண்களின் நலனை கருத்தில் கொண்டு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவித் தொகை திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் வெளிப்படை தன்மையோடு செயல்படுத்தப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் இத்திட்டத்தின்கீழ் 13 லட்சத்து 51 ஆயிரம் பெண்கள் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு 4,735 கோடி ரூபாய் திருமண நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. ரூ.2153 கோடி மதிப்பீட்டில், 6823 கிலோ தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு திட்டத்திற்காக மட்டும் மொத்தமாக சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. லண்டன் மார்க்கெட்டில் உலகத்தரம் வாய்ந்த தங்கம் கொள்முதல் செய்யப்படுகிறது. நடப்பாண்டில் இத்திட்டத்திற்காக ரூ.726 கோடிக்கு தங்கம் கொள்முதல் செய்யப்பட்டு, வரும் பொங்கல் முதல் ஜனவரி மாதத்திற்குள் வழங்கும் பணிகள் நடைபெறும்.

தமிழக அரசு, பெண்கள் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் மகளிர் சுய உதவி குழு கடன்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஒரு கோடி மகளிருக்கு மேலாக இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதுவரை 92 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் பொருளாதாரம் மேம்பட்டு உள்ளது. வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Similar News