'பாருக்குள்ளே நல்ல நாடு' - டெல்லியில் தமிழகத்தின் கம்பீரம்!

'பாருக்குள்ளே நல்ல நாடு' - டெல்லியில் தமிழகத்தின் கம்பீரம்!

Update: 2021-01-26 17:32 GMT
குடியரசு தினத்தையொட்டி முப்படைகளின் அணிவகுப்பை தொடர்ந்து, மாநிலங்களின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக, வாகன அணி வகுப்பு நடைபெற்றது. ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிக்காட்டி வருகின்றனர். தமிழகம் உள்பட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்றன. டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல்முறையாக 'சாமியே சரணம் ஐயப்பா' கோஷம் எழுப்பப்பட்டது. 

குஜராத்தின் சூரிய கோவில் மற்றும் பாரம்பரிய நடனத்துடன் கூடிய ஊர்தியும், உத்தரகாண்ட் மாநிலத்தின் பெருமையாக கேதர்நாத் கோவில் வடிவமைப்பை கொண்ட ஊர்தியும், சத்தீஸ்கர் மாநிலத்தின் பாரம்பரிய இசை வடிவமைப்பு கொண்ட ஊர்தியும், உத்தரபிரதேசத்தின் ராமர் கோவில் வடிவமைப்புடன் கூடிய ஊர்தியும், இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துடன் மேற்கு வங்க மாநில அரசின் அணி வகுப்பு ஊர்தியும் இடம்பெற்றன.

தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக, மாமல்லபுரம் கடற்கரை கோவிலின் மாதிரியுடன் வாகனம் அணிவகுத்துச் செல்ல, பெண்கள் பரதநாட்டியம் ஆடி மகிழ்வித்தனர். டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பின் போது, முதல்முறையாக சாமியே சரணம் ஐயப்பா என்னும் கோஷம் ஒலிக்கப்பட்டது. இது கேரள மக்களை பெருமைக்குள்ளாக்கியது.

Similar News