சென்னை வாசிகளுக்கு நற்செய்தி.. நாளை முதல் மெரினா கடற்கரை செல்ல மக்களுக்கு அனுமதி.!

சென்னை வாசிகளுக்கு நற்செய்தி.. நாளை முதல் மெரினா கடற்கரை செல்ல மக்களுக்கு அனுமதி.!

Update: 2020-12-13 15:07 GMT

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக சென்னை மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில், நாளை முதல் அனுமதி அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் மூடப்பட்டிருந்தது. மேலும், தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும், தடை உத்தரவை மீறி கடற்கரை பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், பொதுமுடக்க தளர்வில் டிசம்பர் 14ம் தேதி முதல் மெரினா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக சென்னை மாநகராட்சி ஊழியர்கள் கடற்கரை மணற்பரப்பு, சர்வீஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை நகர வாசிகளின் பொழுது போக்குக்குகாக செல்லும் இடம் மெரினா கடற்கரை மட்டுமே. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

Similar News