காவலர்களுக்கு ஓர் நற்செய்தி.. தமிழக அரசு முடிவு.!
காவலர்களுக்கு ஓர் நற்செய்தி.. தமிழக அரசு முடிவு.!
தமிழகம் முழுவதும் காவலர்கள் 1,21,215 பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு என நான்கு காவல் மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7 பெரிய நகரங்களான சென்னை, திருப்பூர், மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகியவை காவல்துறை ஆணையாளர் தலைமையில் காவலர்கள் இயங்குகின்றனர்.
இந்நிலையில், பண்டிகை காலங்களில் காவலர்களுக்கு விடுப்பு இல்லாமல் வாரம் முழுவதும் பணியாற்றும் சூழல் உருவாகிறது. இது போன்ற சமயத்தில் காவலர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இதனை மாற்றும் விதமாக வார விடுப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், அண்மையில் காவல்துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளார்.
வாரத்தின் 7 நாட்களும் வேலை செய்வதால் காவலர்கள் மன உளைச்சலில் தவிப்பதாக சுட்டிக்காட்டிய காவலர் அதிகாரிகள், வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு அவசியம் என வலியுறுத்தினர்.
நீண்ட நாளாக இருந்து வரும் இக்கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பும், ஞாயிற்றுக்கிழமை விடுப்பை சுழற்சி முறையில் கொடுக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவலர்களுக்கு விடுப்பு வழங்குவது நல்லதுதான், அவர்களும் சக மனிதர்கள்தான் எனவே விடுப்பு வழங்கினால் அவர்களின் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிடுவார்கள்.