சாப்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை: அரசு பெண்கள் விடுதியில் மாணவிகள் போராட்டம்!
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு பெண்கள் கல்லூரி விடுதியில் சாப்பாடு சரிவர செய்வதில்லை எனவும், தரமானதாக இல்லை என்று மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு பெண்கள் கல்லூரி விடுதியில் சாப்பாடு சரிவர செய்வதில்லை எனவும், தரமானதாக இல்லை என்று மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விருத்தாசலம் கொலஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அது போன்று படித்து வரும் மாணவிகள் வெளியூரை சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் அரசு பெண்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
"சரியான சாப்பாடே இல்லை... கேட்டால் திட்டுகிறார்கள்" - அரசு விடுதி மாணவிகள் போராட்டம்#Protest #GovtHostel #Studentshttps://t.co/ww3SftNBid
— Thanthi TV (@ThanthiTV) March 8, 2022
ஆனால் விடுதியில் இரவுநேரத்தில் பாதுகாப்பதற்கு வார்டன் இல்லை எனவும், தரமற்ற முறையில் சாப்பாடு செய்து கொடுப்பதாகவும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு எதுவும் கொடுப்பதில்லை அதனால் வெறும் முருங்கை மரத்தில் இருக்கும் காய் வைத்து சமைத்து தருவதாக மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு சார்பில் யாரும் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனர்.
Source, Image Courtesy: Twiter