நிவர் புயல் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.74.24 கோடி விடுவித்த தமிழக அரசு.!

நிவர் புயல் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.74.24 கோடி விடுவித்த தமிழக அரசு.!

Update: 2020-12-09 12:31 GMT

தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கடந்த 2 வாரத்திற்கு மேலாகவும் கனமழை பெய்தது. கடலோர மாவட்டம் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், நிவர் புயல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்கவும், சீரமைப்புப் பணிகளுக்காகவும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 74 கோடியே 24 லட்ச ரூபாய் விடுவிக்கப்பட்டதாகத் தமிழக அரசு கூறியுள்ளது.

மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை மாநகராட்சிக்கும், பொதுப்பணி, வேளாண்மை, நெடுஞ்சாலை, மின்வாரியம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கும் 74 கோடியே 24 லட்ச ரூபாய் விடுவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

புயல் மழை வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 24 லட்ச ரூபாயும், வெள்ளக்கட்டுப்பாடு, சீரமைப்புப் பணிகளுக்காகப் பொதுப்பணித்துறைக்கு 20 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின்னுற்பத்தி பகிர்மானக் கழகம் ஆகிய ஒவ்வொன்றுக்கம் 10 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News