மாடுபிடி வீரருக்கு அரசு பணியா.? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு தகவல்.!

மாடுபிடி வீரருக்கு அரசு பணியா.? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு தகவல்.!

Update: 2021-01-15 10:23 GMT

மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்குவது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகையும் மகிழ்ச்சியுடனே தொடங்கியுள்ளது. கிராமங்களில் உள்ள ஒவ்வொரு விவசாயிகளும் தங்களது கால்நடைகளை குளிப்பாட்டி, அதற்கு அலங்காரம் செய்து, பலூன் கட்டி அலகு பார்ப்பார்கள்.

பின்னர் புதிய பானையில் பொங்கல் வைத்து அதனை மாட்டிற்காக படைத்து அதற்கு உணவு அளிப்பார்கள். இதன் பின்னரே விவசாயிகள் உணவு அருந்துவார்கள். அதே போன்று மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இன்று பாலமேட்டில் ஜல்லிகட்டுப் போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.

இந்த போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். அவருடன் தென்மண்டல ஐஜி முருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர். இந்தப்போட்டியில் 651 மாடுபிடி வீரர்களும், 756 காளைகள் பங்கேற்று வருகின்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் களைகளை அடக்குபவர்களுக்கு பல்வேறு வகையான பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், மதுரை, பாலமேட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது: சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்க பரிசீலனை நடைபெற்று வருகிறது. மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்குவது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும், அரசியலை முன்னிறுத்தி ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ராகுல்காந்தி, உதயநிதி வந்தனர்.

திருமங்கலம் அருகே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்காக கட்டிய கோயிலை ஜனவரி 30ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார் என்றார்.

Similar News