திருவண்ணாமலையில் வாக்குச்சாவடி அமைப்பது பற்றி வட்டாட்சியர் ஆலோசனை.!

திருவண்ணாமலையில் வாக்குச்சாவடி அமைப்பது பற்றி வட்டாட்சியர் ஆலோசனை.!

Update: 2021-02-06 12:54 GMT

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் வாக்குச்சாவடி பிரித்தல் ஆலோசனைக் கூட்டம் போளூர் வட்டாட்சியர் சாப்ஜான் தலைமையில் நடைபெற்றது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு வகையான பணிகளை தற்பொழுது செய்து வருகிறது.
கடந்த ஆண்டு முதல் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய வாக்காளர்கள் சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தது.

இந்நிலையில், போளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1000 வாக்காளர்களுக்கு மேல் கொண்டுள்ள வாக்குச்சாவடி மையங்கள் பிரித்தல், இடமாற்றம் தொடர்பாக இன்று (6ம் தேதி) போளூர் வட்டாட்சியர் சேத்பட் வட்டாட்சியர் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் போளூர் வட்டாட்சியர் வி.சாப்ஜான், சேத்பட் வட்டாட்சியர் பூங்காவனம், தேர்தல் துணை வட்டாட்சியர் மஞ்சுளா, போளூர் மற்றும் சேத்துப்பட்டு வட்டங்களைச் சேர்ந்த வருவாய்  ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
 

Similar News