சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற ஆளுநர், அமைச்சர் ஜெயக்குமார்.!

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற ஆளுநர், அமைச்சர் ஜெயக்குமார்.!;

Update: 2021-02-25 11:35 GMT
சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற ஆளுநர், அமைச்சர் ஜெயக்குமார்.!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரதமர் மோடி பல்வேறு வகையிலான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று டெல்லியில் இருந்து சென்னைக்கு வருகை புரிந்தார். இதனையடுத்து சென்னை விமான நிலையத்திற்கு வருகை புரிந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றார்.

இதனையடுத்து பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார். புதுச்சேரியில் அவருக்கு பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். இந்த வரவேற்பை தொடர்ந்து கார் மூலம் ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெறும் கருத்தரங்கு கூடத்துக்கு பிரதமர் செல்கிறார். அங்கு நடைபெறும் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் புதுச்சேரிக்கு வருகை புரிவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் மற்றும் கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Similar News